சென்னை: பழனி பஞ்சாமிர்தத்தில் ஆவின் நெய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என தமிழ்நாடுஅரசின் அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
திருப்பதி லட்டில், விலங்குகளின் கொழுப்பு கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் பயன்படுத்தப்பட்டுதெரிய வந்த நிலையில், பழனி பழனி பஞ்சாமிர்தத்திலும் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதா என கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
இதைத்தொடர்ந்து, தமிழக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. அதில், பழனி பஞ்சாமிர்தம் செய்யப் பயன்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு இருப்பதாக பரவும் செய்தி உண்மையல்ல . ஆவின் நெய் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது என கூறி உள்ளது.
கோவில்களில் கொடுக்கப்படும் பிரசாதம் என்பது பக்தர்களால் மிகவும் விரும்பப்படும் ஒன்றாகும். கோவில் பிரசாதம் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது திருப்பதி லட்டுதான். அதற்குப்பின் மிகவும் பிரபலமான பிரசாதம் என்றால் அது பழனி பஞ்சாமிர்தம்தான். தமிழகத்தின் பழனி மலை நகரத்தில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி கோவிலின் புனித பிரசாதம் ‘பழனி பஞ்சாமிர்தம்’. இது பழ கலவையின் பழமையான வடிவங்களில் ஒன்றாக மிகவும் புகழ்பெற்றது, இந்த இனிமையான பிரசாதம் புவியியல் குறியீடுகளை (ஜிஐ) வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்படடு உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. திருப்பதி கோயிலுக்கு ஏ.ஆர். புட்ஸ் என்ற நிறுவனம் நெய் வழங்கிய நிலையில், தமிழகத்தில் புகழ்பெற்ற பழனி கோயிலுக்கும் இந்த நிறுவனம் நெய் வழங்கியுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து, பழனி பஞ்சாமிர்தம் செய்யப் பயன்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு இருப்பதாக பரவும் செய்தி உண்மையல்ல என்று தமிழக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எ தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு இதற்கு விளக்கம் தெரிவித்துள்ளது. ‘பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடமிருந்தே பெறப்படுகிறது என அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது’ என்று கூறியுள்ளது.