வெலிங்டன்: டி-20 போட்டிகளில், 100 சிக்ஸர்களை அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச்.
நியூசிலாந்திற்கு எதிரான 4வது டி-20 போட்டியில், 4 சிக்ஸர்களை விளாசியதன் மூலம், இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். மேலும், உலகளவில் இந்த சாதனையை நிகழ்த்தும் 6வது பேட்ஸ்மென் என்ற பெயரையும் பெற்றுள்ளார் இவர்.
இந்தப் பட்டியலில், நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில், 135 சிக்ஸர்களுடன் முதல் இடத்தில் உள்ளார். இரண்டாமிடத்தில், 127 சிக்ஸர்களுடன் இந்தியாவின் ரோகித் ஷர்மா உள்ளார்.
இங்கிலாந்தின் இயன் மோர்கன் 113 சிக்ஸர்களுடன் மூன்றாமிடத்திலும், நியூசிலாந்தின் காலின் மன்ரோ 107 சிக்ஸர்களுடன் நான்காமிடத்திலும், விண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல் 105 சிக்ஸர்களுடன் ஐந்தாமிடத்திலும் உள்ளனர்.
தற்போது, 100 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளதன் மூலம், இந்தப் பட்டியலில் ஆறாவது நபராகவும், ஆஸ்திரேலியா சார்பில் முதல் நபராகவும் இணைந்துள்ளார் ஆரோன் பின்ச்.
மேலும், டி-20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களின் பட்டியலிலும், டேவிட் வார்னரை பின்னுக்குத் தள்ளி, முதலிடம் பிடித்துள்ளார் ஆரோன் பின்ச்.