சண்டிகர்: முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை ராஜ்யசபா எம்.பி.யாக்க ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடைபெற்று முடிந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அங்கு மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 தொகுதிகளை ஆம்ஆத்தி கட்சி கைப்பற்றி மாபெரும் சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, பஞ்சாபின் முதல் மந்திரி வேட்பாளராd பகவந்த் மான் நேற்று பதவியேற்றார். அவரது பதவி ஏற்புக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மகிழ்ச்சியடன் தனது நண்பருக்கு வாழ்த்து தெரிவிப்பதாக டிவிட் போட்டிருந்தார். டிவிட்டில் “நமது புதிய முதலமைச்சரான @AamAadmiParty மற்றும் எனது நண்பர் #BhagwantMann க்கு வாழ்த்துக்கள்… பகத் சிங்கின் புதிய முதல்வராக அவர் பதவியேற்கப் போகிறார் என்பதைக் கேட்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கட்கர்காலன் கிராமம்…” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஹர்பஜனை ராஜ்யசபா எம்.பி.யாக்கி அழகு பார்க்க ஆம்ஆத்மி கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஹர்பஜன் சிங் மாநிலத்தில் உள்ள உத்தேச விளையாட்டு பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி 92 எம்எல்ஏக்களை பெற்றுள்ளதால், அம்மாநிலத்தின் சார்பில் ஆம்ஆத்மி கட்சிக்கு 6 மேல்-சபை எம்.பி. பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது பதவியில் உள்ள ராஜ்யசபா எம்.பி.க்களின் 5 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இதன் காரணமாக, அந்த 5 இடங்களையும் நிரப்ப ஆம்ஆத்மி கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் ஒரு இடம் ஹர்பஜனுக்கு ஒதுக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மாநில முதல்வர் பகவத்மான், தனது நண்பரான ஹர்பஜனை எம்.பி.யாக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.