டெல்லி: டெல்லி மதுபொன கொள்கை ஊழல், அதைத்தொடர்ந்து கெஜ்ரிவால் உள்பட பலர் கைது செய்யப்பட்ட விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது முதல்வர்  கெஜ்ரிவாலின் தனி செயலாளர் பிபவ்குமார்  தாக்கியதாக ஆம் ஆத்மி பெண் எம்.பி சுவாதி மலிவால் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். இது மேலும் பரபரப்பை கூட்டி உள்ளது.

மதுபான கொள்கை முகைகேடு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்ட ஆம்ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதலமைச்சருமான கெஜ்ரிவால், உச்சநீதிமன்றத்தில் தயவால் இடைக்கால ஜாமினில் வெளியேவந்து அரசியல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில்,  ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை பெண் எம்.பி. சுவாதி மலிவால்.   அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி செயலாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.  இது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததின் பேரில் அங்கு சென்ற தன்னை,   முதல் மந்திரி கெஜ்ரிவாலின் வீட்டில் வைத்து  அவரது தனி உதவியாளர்  பிபவ் தாக்கியதாக சுவாதி டெல்லி போலீசிடம் போன் செய்து முறையிட்டுள்ளார். இதையடுத்து, கெஜ்ரிவாலின் இல்லத்துக்கு விரைந்த போலீசார் இதுதொடர்பான விசாரணையை தொடங்கி உள்ளனர்.

டெல்லி முதல்வர் இல்லத்தில் இருந்து காலை 10 மணியளவில் மாலிவால் தான் தாக்கப்பட்டது குறித்து டெல்லி காவல்துறைக்கு  அழைப்பு விடுத்ததாகவும்,  இந்த அழைப்பைத் தொடர்ந்து, டெல்லி காவல்துறை முதல்வரின் இல்லத்திற்கு சென்றடைந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளராக பிபவ் குமார் இருந்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட செயலாளர் பதவியில் இருந்து அவரை டெல்லி விஜிலென்ஸ் துறை நீக்கியதை அடுத்து அவர் சமீபத்தில் பிரபலமானார்.

2007 ஆம் ஆண்டு பிபவ் குமார், ‘அரசு ஊழியரைத் தனது கடமையைச் செய்யவிடாமல் தடுக்கும் வகையில் குற்றவியல் சக்தியைப் பயன்படுத்தியதாக’ அவர் மீதான வழக்கு தொடர்பாக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையில், கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதில் ஸ்வாதி மாலிவால் மவுனம் காப்பதாக பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில்தான்,  AAP RS MP மற்றும் முன்னாள் DCW தலைவரான ஸ்வாதி மாலிவால் டெல்லி முதல்வரின் PA தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டுகிறார்.

மதுவிலக்குக் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமின் கோரிய நிலையில், தேர்தலை முன்னிட்டு அவருக்கு, இந்தியாவின் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மே 10)  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதன் உத்தரவில், ஜூன் 2 ஆம் தேதி கெஜ்ரிவாலை சரணடையுமாறு உச்சநீதிமன்றம் மேலும் கூறியது.

டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் நீண்ட போராட்டத்துக்கு பிறகு மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில் அவரது சொந்த கட்சி பெண் எம்.பி.யின் குற்றச்சாட்டு அக்கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பிபவ் குமார், சமீபத்தில்  சட்டத்துக்குப் புறம்பான வகையில் கெஜ்ரிவாலின் பி.ஏ.வாக நியமிக்கப்பட்டுள்ளதாக டெல்லி லஞ்ச ஒழிப்புத் துறை குற்றம்சாட்டியிருந்தது. அதுமட்டுமின்றி, கடந்த 2007-ம் ஆண்டு அரசு அதிகாரியை வேலை செய்யவிடாமல் தடுத்து தாக்குதல் நடத்தியதாகவும் பிபவ் குமார் மீது குற்றச்சாட்டு உள்ளது.