மலேர்கோட்டா
ஆம் ஆத்மி எம் எல் ஏ நரேஷ் யாதவுக்கு குரான் அவமதிப்பு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் மலேர்கோட்டா மாவட்டதில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் 24 ஆம் தேதி, இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் சில பக்கங்கள் கிழக்கப்பட்டு சாலையில் வீசப்பட்ட சம்பவத்தால் இருதரப்பினரிடையே மோதல் வெடித்துமோதல் வன்முறையாக மாறி, வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
காவல்துறையினர் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. நரேஷ் யாதவ் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். , கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எம்.எல்.ஏ. நரேஷ் யாதவ் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்தைஎதிர்த்து முகமது அஸ்ரப் என்பவர் மலேர்கோட்டா மாவட்ட நீதிமன்றத்தி; மேல்முறையீடு செய்தார்.
நீதிபதி பரிமேந்தர் சிங் முன்பு இந்த வாக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. நரேஷ் யாதவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.11,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அவருடன் கைது செய்யப்பட்ட விஜய் குமார் மற்றும் கவுரவ் குமார் ஆகியோருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்ட நீதிபதி, நந்த் கிஷோர் என்பவரை வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார்.