அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடக்கவுள்ள நிலையில் அதிபர் வேட்பாளர்களான டொனால்டு ட்ரம்பும், ஹிலாரி கிளிண்டனும் அமெரிக்காவில் வசிக்கும் பல்வேறு இன மக்களை ஓட்டுவேட்டை நடத்தி வருகின்றன.
இந்தியாவின் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாககவின் தாரக மந்திரமாக விளங்கிய “ஆப்கி பார் மோடி சர்க்கார்” என்ற வாசகத்தை அப்படியே மாற்றி “ஆப்கி பார் ட்ரம்ப் சர்க்கார்” என்று விளம்பரப்படுத்தி ஜனநாயகக் கட்சி அமெரிக்க இந்தியர்களிடையே ஓட்டு வேட்டை நடத்துகிறது.
கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி நியூ ஜெர்ஸி நகரில் நடந்த பிரம்மாண்ட கூட்டத்தில் அமெரிக்க இந்தியர்களிடம் உரையாற்றிய டொனால்டு ட்ரம்ப் அவர்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து, “நாங்கள் இந்துக்களை நேசிக்கிறோம், இந்தியர்களை நேசிக்கிறோம்” என்று கூறினார்.
சமீபத்தில் நடந்த கருத்து கணிப்புகளில் டொனால்டு ட்ரம்ப், ஹிலாரியைவிட பின்தங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் மட்டும் இரண்டு மில்லியன் இந்துக்கள் இருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது. இதில் இந்தியர்களே பெரும்பான்மையினர், இவர்களுடன் இலங்கை, நேபாளம், வங்கதேசம் மற்றும் கரீபியன் பகுதிகளை சேர்ந்தவர்களும் அடக்கம். கிட்டதட்ட 65% இந்திய அமெரிக்கர்கள் குடியரசு கட்சியை ஆதரிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.