‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக கௌதம் வாசுதேவ் மேனனுடன் கைகோர்த்துள்ளார்.

இப்படத்திற்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ எனப் பெயரிட்டு பின் ‘வெந்து தணிந்தது காடு’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். பாடலாசிரியராக தாமரை பணிபுரிந்து வந்தார். நடிகை ராதிகா, இப்படத்தில் சிம்புவின் தாயாராக நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக இளம் நடிகை கயாடு லோகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வித்தியாசமான தோற்றத்தில் சிம்பு இருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி ரசிகர்களை கவனம் ஈர்த்து வருகிறது. ஏற்கனவே உடலெடையை குறைத்த சிம்பு இந்த படத்திற்காக இன்னும் 15 கிலோ குறைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக பாவக்கதைகள் மூலம் பிரபலமான ஏஞ்சலினா ஆபிரகாம் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]