கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியாவில் அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிரபலங்களும், தொண்டு நிறுவனங்களும் நிதி திரட்ட முன்வந்துள்ளன.

அந்த வகையில் ‘செக்மேட் COVID’ என்ற நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறது தனியார் அமைப்பான செஸ்.காம். ஜூன் 13-ம் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அமீர்கான், ஐந்து முறை உலக சாம்பியனும், இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டருமான விஸ்வநாதன் ஆனந்துடன் செஸ் விளையாடவிருக்கிறார்.

ஷூட்டிங்கின் இடைவேளையில் அமீர்கான் செஸ் விளையாடியதை பல முறை மீடியாக்களில் தெரியப்படுத்தியுள்ளனர். தவிர ஏற்கனவே விஸ்வநாத ஆனந்துடன், அமீர்கான் செஸ் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.