ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் 65 வது நாளை எட்டியுள்ளது.
ஐந்து மாநிலங்களைக் கடந்து ஆறாவது மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் பயணம் தொடர்ந்து வருகிறது.
நான்டெட் பகுதியில் இன்று நடைபெற்று வரும் நடைப்பயணத்தில் ராகுல் காந்தியுடன் சிவசேனா இளைஞர் அணி தலைவர் ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டார்.
ராகுலுடன் இனைந்து நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்திலும் திரளான மக்கள் கலந்து கொண்டு வரவேற்பளித்தனர்.
தென் மாநிலங்களில் இந்திய ஒற்றுமை பயணம் மூலம் ராகுல் காந்திக்கு பெருகிவரும் செல்வாக்கு காரணமாக நான்கு தென்மாநிலங்களிலும் நலத்திட்டங்களை அறிவிக்க மின்னல் வேகத்தில் வந்து சென்றுள்ளார் பிரதமர் மோடி.
அதேவேளையில் கடந்த காலத்தில் பாஜக-வுடன் தோழமை பாராட்டிய சிவசேனா, அக்கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி குளிர் காய்ந்து வரும் பாஜக-வை விட காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை தொடர்வதில் தற்போது முனைப்பு காட்டி வருவது ஆதித்ய தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோரின் நடவடிக்கை உணர்த்துகிறது.