ல திருவிழாக்களின் மாதமாக இருக்கும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை கூட மிகவும் சிறப்பு மிக்கதானதாக விளங்குகின்றது.

அமாவாசையில் ஆடி அமாவாசை, மகாளயா அமாவாசை, தை அமாவாசை ஆகியவை மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

தமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன்) அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது.

நம்மை நிம்மதியாக வாழ வைக்கும் பித்ரு தர்ப்பணம் ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர் தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் என்று பெயர்.

இறை விருப்பப்படி மானிடருக்கு ஆசி கூறி இல்லறத்தை நல்லறமாக்கி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் அதிகாரம் படைத்தவர்கள் தேவர்களும், பித்ருக்களுமே! அமாவாசை தினம் பிதிர் கடன் செய்வதால் மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிடைக்கின்றது என்பது ஐதீகம்.

முன்னோர்களின் இறந்தத் திதி தெரியாதவர்கள், ஆடி அமாவாசை அல்லது தை அமாவாசையன்று இராமேஸ்வரம் அல்லது சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு கோவிலில் அல்லது வீட்டிலேயே சிரார்த்தம் செய்வது நன்று. அதுவும் முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று (ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையளையும், அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும்.

அமாவாசை என்பது எந்த ஒரு காரியத்தையும் தொடங்க மிகச்சிறந்த நாளாகும். கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் சந்திரன் வளர்வதாக ஐதீகம். அதனால் தான் இது வளர்பிறை என கூறப்படுகிறது.