சண்டக்கோழி 2 படத்தை தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் ராம் போத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார் இயக்குனர் லிங்குசாமி .

RAPO19 என குறிப்பிடப்படும் ராம் போத்தினேனியின் 19வது திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்க ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சிட்டூரி தயாரிக்கிறார்.

பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான திரிஷ்யம் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.

நடிகர் ராம் போத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது குறிப்பிடதக்கது. இப்படத்தின் தமிழக உரிமையை மாஸ்டர் பீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தில் வில்லனாக ஆதி நடிக்கிறார் .தமிழில் நாயகனாக நடித்துவரும் ஆதி தெலுங்கில் ரேஸ் குர்ரம் உள்பட சில படங்களில் ஏற்கனவே வில்லனாக நடித்துள்ளார். அவரைதான் இப்போது ஒப்பந்தம் செய்துள்ளனர்.