டில்லி

தார் என்பது அடையாளத்தை உறுதி செய்ய மட்டுமே, தகவல் அறிய அல்ல என ஆதார் நிறுவன அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.

ஆதார் என்பது இந்தியாவில் பல்வேறு திட்டங்களுக்கும் அவசியமாகி வருகிறது.    எரிவாயு மானியத்தில் இருந்து மொபைல் சேவை வரை அனைத்துக்கும் ஆதார் எண்ணை இணைத்தாக வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.    அதை எதிர்த்து வழக்கும் போடப்பட்டு அந்த வழக்கு அரசியல் சாசன மையத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த ஆதார் மூலம் ஒரு நபரின் தனிப்பட்ட தகவல்களை அறிந்துக் கொள்ள முடியும் எனவும்  இந்த தகவலை மற்றவர்கள் பயன்படுத்த நேரிடலாம் என அச்சம் எழுந்துள்ளது.    அத்துடன்  ஆதார் மூலம் தனி நபர் விவரங்கள் திருடப்பட்டதாக ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டது.   ஆதார் நிறுவனம் அந்தப் பத்திரிகை மீதும் அந்தச் செய்தியாளர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளது.

இவ்வாறு எழுந்துள்ள பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவது போல ஆதார் ஆணைய தலைமை அதிகார் அஜய் பூஷன் டிவிட்டரில் தகவல்கள் வெளியிட்டுளார்.  அவர்,  “ஆதார் என்பது அடையாளம் காண மட்டுமே உள்ள சாதனம்.   அது எந்த ஒரு தனிப்பட்ட மனிதரின் தகவல்களை அறிவதற்கான சாதனம் அல்ல.   வலுவான சட்டங்களினால் ஆதார் தகவல்கள் பத்திரமாக பாதுகாக்கப் பட்டு வருகின்றன.” என தெரிவித்துள்ளார்.