ஐதராபாத்.
இனி வரும் காலங்களில் ‘தேர்தலில், ஓட்டு போடுவதற்கு, ஆதார் அட்டையை பயன்படுத்தலாம்,’ என, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர், டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறி உள்ளார்.
நேற்று ஆந்திரமாநிலம் ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணமூர்த்தி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இனி வரும் தேர்தல்களில் ஓட்டு போட, ஆதார் அட்டையையும், வாக்காளர் அடையாள அட்டை யையும், அடையாள ஆவணங்களாக, பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. வாக்காளர் அடையாள அட்டைக்கு பதில், ஆதார் அடையாள அட்டையையே, ஆவணமாக பயன்படுத்தலாம்.
நாடு முழுவதும், எல்லா வாக்காளர்களுக்கும், ஆதார் அடையாள அட்டை அளிக்கப்பட்டிருக்கை யில், இன்னொரு அடையாள அட்டை எதற்கு என கேள்வி எழுப்பிய கிருஷ்ணமூர்த்தி, வாக்காளர் அடையாள அட்டையை ஒழித்து விட்டு, தேர்தலில் ஓட்டு போட, பிரத்யேக ஆவணமாக, ஆதார் அட்டையை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.