டெல்லி: ஆதார் எண்ணுடன், ரேஷன் கார்டுகளை இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

நாட்டின் அனைத்துவிதமான சேவைகளுக்கும் ஆதார் கார்டு இன்றியமையாததாக உள்ளது. அதனால், வங்கி, ரேசன் உள்பட அனைத்து பரிவரித்தனைகளும் ஆதார் கார்டுடன் இணைக்க மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்த நிலையில்,  ஆதார்-ரேஷன் கார்டு இணைக்க கடந்த இரு ஆண்டுகளாகவே மத்தியஅரசு வலியுறுத்தி வருகிறது. இதன்மூலம்   போலி ரேஷன் கார்டுகள் தடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதற்கான அவகாசம் பல முறை வழங்கி உள்ளது. எற்கனவே வழங்கப்பட்ட அவகாசம்  க ஆகஸ்ட் மாதம்  இறுதியுடன் நிறைவடையும் நிலையில், தற்போது மேலும் ஒரு மாதம் நீட்டித்து அறிவித்து உள்ளது. அதன்படி,   ஆதார் எண்ணுடன், ரேஷன் கார்டுகளை இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும்,   ஆதார்-ரேஷன் கார்டை இணைக்காதவர்கள்   விரைந்து இணைக்க வேண்டும் என்றும்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே ரேஷன் கடை, இ-சேவை மையம் மற்றும் மாநில பொது விநியோக அமைப்பு (TNEPDS) இணையம் என ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் நடைமுறைகளில் தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் ரேஷன் கார்டு-ஆதார் இணைப்பை எளிதாக செய்ய முடியும்.

ஆன்லைன் மூலம் ஆதார் கார்டுடன் ரேசஷன் கார்டை இணைப்பது எப்படி?

TNPDS-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆதார்-ரேஷன் கார்டு இணைப்பு என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
உங்கள் ரேஷன் கார்டு எண்ணை உள்ளிட்டு எண்டர் ஆப்சனை கிளிக் செய்யவும்.
இதன் தொடர்ச்சியாக வரும் பக்கத்தில் காட்டப்படும் உங்களது குடும்ப பட்டியலில் உள்ளவர்களின் பெயரை ஒவ்வன்றாக தேர்ந்தெடுத்து, அவர்களது ஆதார் எண்களை பதிவிட வேண்டும்.

இதன் பின்னர் கேட்கப்படும் தகவல்களை நிரப்பி சமர்ப்பி என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
அதன் தொடர்ச்சியாக, உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
OTP சரிபார்ப்புக்குப் பிறகு மீண்டும் சமர்ப்பி என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
உங்களது தகவல்களை நீங்கள் சமர்ப்பித்த பிறகு, விண்ணப்பம் உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவீர்கள்.
இப்போது உங்கள் ஆதார் எண், ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டுவிடும்.