‘சாவு’ பதிவு செய்யவும் ஆதார் வேண்டுமாம்! மத்தியஅரசின் மனிதாபிமானமற்ற அறிவிப்பு

டில்லி,

த்திய அரசு பல்வேறு வகையான பரிவர்த்தனைகளுக்கு ஆதார் கண்டிப்பாக தேவை என்று கூறியுள்ள நிலையில், தற்போது இறப்பை பதிவு செய்வதற்கும் ஆதார் கண்டிப்பாக தேவை என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

வரும் அக்டோபர் 1ந்தேதி முதல் இது நடைமுறைக்கு வருவதாகவும் கூறியுள்ளது.

மத்திய அரசு  பல்வேறு சமூக நல திட்டங்களுக்கு  ஆதாரை கட்டாயமாக்கி வருகிறது. தொடக்கத்தில் சமூல நலத்திட்டங்களில் சலுகைகளை பெற ஆதார் அவசியம் என்று கூறிய மத்திய அரசு,

பின்னர் வங்கிகளில் கணக்கு தொடங்கவும், வங்கி பண பரிவர்த்தனை செய்யவும், வருமான வரி தாக்கல் செய்யவும், மாணவர்கள் கல்லூரிகளில் உதவிதொகை பெறவும், விமான பயணத்துக்கும், சொத்துக்கள் வாங்க, விற்க என பெரும்பாலான அனைத்துவிதமான பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் கட்டாயம் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வரும் அக்டோபர் 1ந்தேதி முதல் இறப்பை பதிவு செய்யவும் ஆதார் தேவை என்று அறிவித்து உள்ளது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே ஆதார் குதித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கு  சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது மேலும் ஆதார் குறித்து பல அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை மேலும் சங்கடத்திற்கு ஆளாக்கி வருகிறது மத்தியஅரசு.
English Summary
Aadhaar number is made mandatory for registration of death with effect from October 1, 2017