சென்னை: சென்னையில் 2 புதிய காவல் ஆணையரக அலுவலகங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடக்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றதும், சென்னை மாநகர காவல்துறை நிர்வாக வசதிகளுக்காக மேலும் இரண்டாக பிரிக்கப்பட்டது.  அதன்படி, நிர்வாக வசதிக்காக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம், ஆவடி மாநகர காவல் ஆணையர் அலுவலகம் என 3 ஆக பிரித்து அரசாணையும் வெளிடப்பட்டது.

தாம்பரம், ஆவடி ஆகிய இரண்டு புதிய காவல் ஆணையரகம் அமைக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர். அதன்படி தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு சிறப்பு அதிகாரியாக கூடுதல் டிஜிபி ரவி, ஆவடி காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆவடி மற்றும் தாம்பரம் புதிய காவல் ஆணையரகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார். இதையடுத்து புதிய காவல்ஆணையரக அதிகாரிகள் பதவி ஏற்கிறார்கள்.  தாம்பரம் போலீஸ் கமிஷனராக கூடுதல் டிஜிபி ரவி, ஆவடி போலீஸ் கமிஷனராக கூடுதல் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்  பதவியேற்கிறார்கள்.

இன்று முதல் (2202 ஜனவரி 1ந்தேதி) தாம்பரம் மற்றும் ஆவடி என தனித்தனியாக போலீஸ் கமிஷனர் அலுவலகம் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.