சேலம்
தமிழ்நாட்டில் உள்ள சேலம் காவல்துறைக்கு அனுப்ப வேண்டிய புகாரை டிவிட்டர் மூலம் ஒருவர் அமெரிக்கா அனுப்பி உள்ளார்.
நெட்டிசன்கள் தங்கள் புகார்களை டிவிட்டர் மூலம் அளிப்பது தெரிந்ததே. தற்போது வாட்ஸ்அப் மெசேஜில் இது போல அனுப்பப் பட்ட ஒரு புகாரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
அதில் அருனானந்த் என்பவர் சேலம் காவல் துறைக்கு “ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளிடம் ஆட்டோ ஓட்டுனர்கள் அதிகக் கட்டணம் வசூலிப்பது தெரியுமா? 1.5 கிமீ தூரத்துக்கு ரூ. 50 கட்டணமா? இந்த விவகாரங்களை கவனிக்க ஏதும் சிஸ்டம் உள்ளதா?” என சரமாரியாக கேள்விகள் எழுப்பி உள்ளார்.
அதில் அவர் அனுப்பிய சேலம் காவல் துறையில் இருந்து வந்துள்ள பதில், “நாங்கள் அமெரிக்காவில் ஒரேகான் பகுதியில் உள்ள சேலம் காவல்துறை” என்பதாகும். ஆர்வக்கோளாறால் அமெரிக்காவுக்கு அந்த நெட்டிசன் புகாரை அனுப்பி உள்ளது பலருக்கும் சிரிப்பை அளித்துள்ளது.