டில்லி

பாபர் மசூதி இடிப்பின் போது அங்கிருந்த ஒரு பெண் சமூக ஆர்வலர் மீது பாலியல் சீண்டல் செய்யப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

கடந்த 1992 ஆம் வருடம் டிசம்பர் ஆறாம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது.   அந்த நிகழ்வு முடிந்து தற்போது 25 ஆண்டுகள் முடிந்து விட்டன.  அப்போது ஒரு பெண் சமூக ஆர்வலரும் ஆவணப் பட இயக்குனருமான ருசித்ரா குப்தா பாபரி மசூதியில் இருந்தார்.  அவர் தனக்கு நேர்ந்த பயங்கரமான அனுபவங்களை ஒரு பத்திரிகையின் வாயிலாக நினவு கூர்ந்துள்ளார்.

அப்போது சுமார் 24 வயதான ருசித்ரா குப்தா ”பிசினெஸ் இந்தியா” பத்திரிகைக்கு செய்தி சேகரிக்க பாபர் மசூதி வளாகத்துக்கு சென்றுள்ளார்.  அவர், “நான் அந்த வளாகத்தினுள் கடும் முயற்சி செய்து நுழைந்தேன்.  அந்த இடத்தில் பயங்கரக் கூட்டமாக இருந்தது.   பாஜகவினர் என்னிடம் அது கர்ப்பக் கிருகம் எனவும் அங்கு குழந்தை ராமரின் சிலை உள்ளதாகவும் கூறினர்.  நான் அப்போது ஜீன்ஸ் பேண்டும் சட்டையும் அணிந்த ஒரே பெண்ணாக இருந்தேன்.   என்னை இடித்துத் தள்ளியபடி உள்ளே புகுந்த கரசேவகர்கள் “இவள் ஒரு இஸ்லாமியப் பெண்” என குறல் கொடுத்தனர்.  என்னை பலரும் அடிக்க ஆரம்பித்தனர்.  அத்துடன் என்னுடைய மார்பகங்களை சிலர் அமுக்கவும் செய்தனர்.  சிலர் என்னை இடுப்பில் கிள்ளினர்.  எனது அந்தரங்கப் பகுதிகளில் பலர் கைகளை வைத்து தேய்த்தனர்.  எனக்கு அந்த நிமிடமே செத்து விடலாம் என தோன்றியது.

திடீரென்று ஒருவர், “இவளை பக்கத்தில் உள்ள ஒரு சந்துக்கு அழைத்துச் சென்று அங்கே கொலை செய்வோம்” என சொல்ல நான் இழுத்து வரப்பட்டேன்.   அப்போது அங்கிருந்த பீகாரைச் சேர்ந்த ஒருவர் என் உதவிக்கு வந்தார்.  அவரை நான் அதற்கு முன் தினம் பேட்டி எடுத்துள்ளேன். “இந்தப் பெண் ஒரு பத்திரிகையாளர்.  பீகாரை சேர்ந்தவர்.  இந்துப் பெண் எனக் கூறினார்.  அவரையும் அடித்து உதைத்து அவர் காலை உடைத்தனர்.  இருந்தும் அவர் என்னை காப்பாற்றினார்.   எனது சட்டை முழுவதுமாக கிழிந்து விட்டது.  நான் அருகில் ஒரு கட்டிடத்தில் இருந்த லால் கிருஷ்ண அத்வானியிடம் சென்றேன்.  அவரிடம், “அத்வானிஜி, தயவு செய்து மைக் மூலமாக பத்திரிகையாளர்களையும், பெண்களையும் தாக்க வேண்டாம் எனச் சொல்லுங்கள்.  என்னை அவர்கள் பாலியல் சீண்டல் செய்துள்ளனர்.” எனக் கூறினேன்.

அவர் என்னிடம், “உனக்கு நேர்ந்ததை மறந்து விடு.  இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாள்.  கொண்டாடு.  இந்த இனிப்பை எடுத்துக் கொள்” என இனிப்பு வழங்கினார்.  ஒரு பெண் போலீஸ் என்னைக் காப்பாற்றி என் வாகனத்துக்லி அழைத்துச் சென்றார்.  நான் டில்லிக்கு சென்று எனக்கு நேர்ந்தவைகளை விசாரணைக் கமிஷனுக்கு தெரிவித்தேன். அங்கும் என்னிடம் தாறுமாறான கேள்விகள் கேட்கப்பட்டன. “உன் உடலில் தாக்கப்பட்ட அடையாளங்களைக் காட்டுவாயா?  விளம்பரத்துக்காக இதை செய்கிறாயா? நீ புகை பிடிப்பாயா? உனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதா?  சட்டை கிழிந்த நிலையில் எப்படி வெட்கமின்றி அத்வானி முன்பு போய் நீ நின்றாய்? அது உனக்கு அவமானமில்லையா?” போன்ற பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

அவர்களிடம் நான் அவமானம் எனக்கில்லை.  பெண்ணென்றும் பாராமல் என்னை அடித்தவர்களுக்கும் என்னிடம் தவறாக நடந்துக் கொண்டவர்களுக்கும் தான் இது மாபெரும் அவமானம் எனக் கூறினேன்.  என்னை மனித ஜன்மமாகவே அவர்கள் விசாரணையின் போது மதிக்கவில்லை.  அப்போது பயந்த நான் இப்போது பயப்படவில்லை.  இனி என்னை யாரும் மிரட்ட முடியாது” என தெரிவித்துள்ளார்.

 

[youtube https://www.youtube.com/watch?v=s4iPxB-vprk]