திருவனந்தபுரம்,

கேரளாவை சேர்ந்த புவியியல் ஆய்வாளர் ஒருவர் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா மாபெரும் இயற்கை பேரழிவை சந்திக்கும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் ஒரு 2004

கேரளாவை சேர்ந்த பி.கே.ரிசர்ச் அசோசியேஷன் பார் இஎஸ்பி என்ற நிறுவனத்தின் தலைவர் பாபு கலயில் என்பவர் பிரதமர் மோடி கடந்த 20ந்தேதி ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அதில், இந்தியப் பெருங்கடலில் இந்த வருடம் டிசம்பர் 31ந்தேதிக்குள் மிகப்பெரிய நில நடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறி உள்ளார்.

அதன் காரணமாக சுனாமி போன்ற வரலாறு காணாத பேரழிவு ஏற்படும். இதன் காரணமாக இந்திய மிகப்பெரிய பேரழிவை சந்திக்கும் என்று புவியியல் ஆய்வாளரன கலயில்  பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேரழிவு இந்தியா மட்டுமின்றி இலங்கை,  சீனா, வங்கதேசம், இந்தோனேசியா, ஆப்கா னிஸ்தான் உள்பட வலைகுடா நாடுகள்   அழிவை சந்திக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அந்த நேரத்தின்போது, கடலில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும், அரசு எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.‘

கேரளாவை சேர்ந்த இந்த புவியியல் ஆய்வாளரின் எச்சரிக்கை மக்களிடையே பீதியை கிளப்பி வருகிறது.

ஏற்கனவே கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது ஏற்பட்ட வடுவே இன்னும் மறையாத சூழலில், தற்போது அதுபோன்ற பேரழிவு இந்த ஆண்டும் ஏற்படும் என்று அறிவித்திருப்பது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.