கொரோனா அச்சுறுத்தல் ஊரடங்கிலும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள்இரவு-பகலாக தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இளையராஜா கொரோனா போர் வீரர்களுக்காக பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்தப் பாடலை குடியரசு துணைத் தலைவர் உள்ளிட்ட பலர் தங்களுடைய ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளனர்.
இந்தப் பாடலுக்கு இசையமைத்தது மட்டுமன்றி பாடல் வரிகளையும் இளையராஜாவே எழுதியுள்ளார். இப்பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். இந்தப் பாடலை குடியரசு துணைத் தலைவர் உள்ளிட்ட பலர் தங்களுடைய ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளனர்.
பியானோ, கீ போர்டு உள்ளிட்ட வாத்தியங்களின் இசையை இளையராஜாவின் மேற்பார்வையில் லிடியன் செய்துள்ளார். ‘பாரத பூமி’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் பாடலை தனது யூ டியூப் சேனலில் வெளியிட்டுள்ளார் இளையராஜா.