ரு நிமிடம் சிந்தியுங்கள் மக்களே…..! நம்மால் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்ற உயிரினங்களையும் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாக்குகிறது என்பதை சிந்தியுங்கள்..

நாம் செய்யாத செயலை அன்னப்பறவை ஒன்று செய்யும் அற்புதமான வீடியோ சமூக வலைதளங் களில் வைரலாகிறது….

நம்மால் போடப்டும் பிளாஸ்டிக் கழிவுகள் கால்வாயில் தண்ணீரை அசுத்தப்படுத்தியும் தண்ணீர்  செல்வதை  தடுத்தும் வருகையில், அதை  அன்னப்பறவை ஒன்று அசத்தலாக சுத்தம் செய்கிறது. தண்ணீருக்கு குறுக்கே தடையாக உள்ள பிளாஸ்டிக் பைகளை, அங்கிருந்து அகற்றி வேறு இடத்தில் போடும் காட்சி வியக்க வைக்கிறது….

நமது தான்தோன்றித்தனமாக வாழ்க்கையால் சுற்றுச்சுழல் மாசு ஏற்பட்டு வரும் நிலையில், அதன் பாதிப்பு மற்ற உயிரினங்களையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கு, அன்னப்பறவையின் நடவடிக்கையே ஒரு எடுத்துக்காட்டு….

நீரிலும், நிலத்திலும் வாழும் தன்மையுள்ள அன்னப்பறவை, பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால், அதில் பாலை மட்டும் பிரித்துக் குடிக்கும் தன்மை உள்ளது என்று கூறப்படுகிறது. அந்த அன்னப்பறவை இன்று தண்ணீரில் சிக்கியுள்ள  பிளாஸ்டிக்கை பிரித்து எடுக்கும் நிகழ்வு வியப்பை ஏற்படுத்துகிறது….

இனிமேலாவது திருந்துங்கள் மக்களே……