
தெலுங்கானா மாநிலத்தில் 2021ம் ஆண்டு ஜனவரியில் மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுஉள்ளது. இதன் காரணமாக, தேர்தலில் போட்டியிடுவதுகுறித்து அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.
இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடுவது, மற்றும் தேர்தல்வியூகம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி கருத்துக்கேட்டு வருகிறத. அதன்படி, ஐதராபாத்தில்
நேற்று மாநில தலைவர் உத்தம் குமார் ரெட்டி முன்னிலையில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், கட்சியின் இரு தரப்பு தலைவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களை மாநில தலைவர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
இந்த கோஷ்டி மோதல் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
Patrikai.com official YouTube Channel