லண்டன்
லண்டனில் உள்ள ஒரு ஆய்வு நிறுவனம் அதிக மருத்துவ வசதிகள் கொண்ட 16 நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
லண்டனில் உள்ள தி லெகாடம் நிறுவனம் உலகெங்கும் உள்ள நாடுகளில் அதிக மருத்துவ வசதிகள் உள்ள நாடுகளைப் பற்றி ஆய்வுகள் நடத்தியது. மொத்தம் 104 வசதிகளைப் பற்றி ஆய்வு நடத்திய அந்த நிறுவனம் உலகில் அதிக மருத்துவ வசதிகள் கொண்ட 16 நாடுகளின் பட்டியலை வெளியிட்டது. ஆனால் அதில் மருத்துவ வசதிகள் நிறைந்துள்ள நாடு என சொல்லப்படும் இந்தியா இடம் பெறவில்லை.
இந்தியா மட்டுமின்றி உலகில் மருத்துவ வசதிகள் அதிகம் உள்ள முதல் நாடு என சர்வ தேச சுகாதார நிறுவனம் புகழ்ந்த பிரிட்டனும் இந்த 16 நாடுகள் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் இடம் பெற்ற நாடுகள்
16 கனடா
15 கத்தார்
14 ஃபிரான்சு
13. நார்வே
12 நியூஜிலாந்து
11 பெல்ஜியம்
10. ஜெர்மனி
9. இஸ்ரேல்
8. ஆஸ்திரேலியா
7. ஹாங்காங்
6. சுவீடன்
5. நெதர்லாந்து
4. ஜப்பான்
3. சுவிட்சர்லாந்து
2. சிங்கப்பூர்
1. லக்ஸம்பர்க்
இந்த நிறுவனம் இந்த நாடுகளைப் பற்றி வெளியிட்டுள்ள பட்டியிலில் இந்த நகரங்களை வர்ணித்துள்ளதே தவிர அந்த நகரங்களில் உள்ள மருத்துவ வசதிகளை குறிப்பிடவில்லை.