பல நாடுகளில் பட்டம் விடும் திருவிழா நடைபெறுவது வழக்கம். நமது நாட்டிலும் வட மாநிலங் களில் பட்டம் விடும் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
தைவான் நாட்டிலும், வழக்கம்போல பட்டம் விடும் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. வடக்கு தைவானின் ஹ்சிஞ்சுவில் நடைபெற்ற காத்தாடி, திருவிழாவில் ஏராளமான ராட்சத பட்டங்கள் பறக்க விடப்பட்டது.
அப்போது, அதை பெற்றோருடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த 3வயது சிறுமி, ஒரு ராட்சத பட்டத்தின் வாலில் சிக்கி, அந்த ராட்சத பட்டத்துடன் சேர்ந்து வானில் பறந்தாள்.
சுமார் 50 உயரத்துக்கு அந்த பட்டம் பறந்த நிலையில், அதனுடன் சேர்ந்து அநத் குழந்தையும் பறந்த அதிர்ச்சி சம்பவம் பார்வையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே பட்டத்தை இறக்கி, குழந்தையை காப்பற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதைத்தொடர்ந்து, வெற்றிகரமாக அந்த ராட்சத பட்டம் தரையிறக்கப்பட்டு, அந்த குழந்தை பத்திர மாகவும் பாதுகாப்பாகவும் காப்பாற்றப்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.