டெல்லி: டெல்லியில் உள்ள பிரபல அரசு மருத்துவமனையான சப்தர்ஜங் மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு சிச்சை பெற்று வந்த நோயாளிகள் உடடினயாக அப்புறப்படுத்தப்பட்டதால், சுமார் 50 நோயாளிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் பல்நோக்கு மருத்துவமனையான சப்தர்ஜங் மருத்துவமனை திகழ்கிறது. பழமையானது மட்டுமின்றி இந்தியாவிலேயே அதிக படுக்கைகளை கொண்ட மருத்துவமனையாகவும் உள்ளது. இந்த மருத்துவமனை மத்தியஅரசு கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
இந்த மருத்துவமனையின் ஐசியு பிரிவில் இன்று அதிகாலை 6.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, ஐசியூ வார்டில் சிகிச்சை பெற்றுவந்த 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உடடினயாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர்தப்பினர்.
தீவிபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.