திருவாரூர்:

திருவாரூர் அருகே, பயிர் நீரின்றி கருகியதால் விவசாயி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

திருவாரூர் அருகே உள்ள காப்பணாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ரமேஷ். இவர் தனது விவசாய நிலத்தில் பருத்தி பயிரிட்டிருந்தார்.

இயற்கை பொய்த்து போனதாலும், கர்நாடகா காவிரியில் நீர் தர மறுப்பதாலும், தமிழகத்தில் வறட்சி கோர தாண்டவமாடி வருகிறது.

இந்நிலையில் ரமேஷ்  பயிரிடப்பட்ட பருத்தி பயிருக்கு  தேவையான நீர் கிடைக்காததால், அதைக்கண்டு வருந்திய ரமேஷ் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

விவசாயி தற்கொலை பற்றி குடவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் வறட்சி காரணமாக நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள நிலையில், தற்போது விவசாயி ரமேஷ் தீக்குளித்து தற்கொலை செய்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.