ஷீரடி:
சட்டீஸ்காரை சேர்ந்த பக்தர் ஒருவர் சாய்பாபா கோவிலுக்கு 1,200 கிராம் எடையில் தங்க தட்டை நன்கொடையாக இன்று வழங்கியுள்ளார்.

அவர் கேட்டுக் கொண்டதற்கு இனங்க அவரது பெயரை வெளியிட சாய்பாபா சன்ஸ்தான் டிரஸ்ட் தெரிவித்தள்ளது. தினமும் நடைபெறும் ஆரத்தி மற்றும் பூஜைக்கு இந்த தட்டு பயன்படுத்தப்பட உள்ளது.
ரூ.500 மற்றும் ரூ.1,000 ஆகியவை செல்லாது என்ற அறிவிப்பினால் டிரஸ்டுக்கு நன்கொடை அளிப்பதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.75 லட்சம் சேர்ந்துள்ளது. அவற்றில் ஒரு லட்சம் ரூபாய் கிழிந்த நோட்டுகள். மீதமுள்ள ரூ.74 லட்சம் செல்லத்தக்க நோட்டுகளாகும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.