புதுக்கோட்டை:  திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து நீதித்துறையை திமுக அரசுக்கு எதிராகத் திருப்பி விட முயற்சிக்கிறது பாஜக அரசு. இது து கண்டிக்கத்தக்கது என்று தமிழ்நாடு அமைச்சர்  அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய திமுக உள்பட கூட்டணி கட்சிகள் பாராளுமன்ற சபாநாயகரிடம் வலியுறுத்தியதற்கு  56  ஓய்வுபெற்ற  நீதிப​தி​கள்  கொண்டு குழு கடும் கண்டனம் தெரிவித்தது. இது அரசி​யல் நிர்​பந்​தங்​களுக்கு நீதிப​தி​களை அடிபணிய வைக்கும் முயற்சி, அரசியல் சாசனத்துக்கு எதிரான சாடியது. இது நாடு முழுவதும் பேசும்பொருளாக மாறியது.

இநத் நிலையில்,  புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த  இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி   திமுகவுக்கு எதிராக நீதித்துறையை திருப்பி விட பாஜக சதி செய்வதாக கூறினார்.

“திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் இருப்பது நில அளவீடு கல். கீழே இருப்பவர்களும் பார்க்க வேண்டும் என்பதற்காக உயரமாக வைக்கப்பட்டுள்ளது. எந்த காலத்தில் அந்தக் கல்லில் தீபம் ஏற்றினார்கள் என்ற ஆதாரத்தை காட்டிவிட்டு பேச வேண்டும். அந்தக் கல்லில் தீபம் ஏற்றப்படவில்லை. அதற்கான ஆதாரம் கிடையாது என்று சொல்லி இருக்கிறார்கள். அதை வைத்து நீதித்துறையை திமுகவுக்கு எதிராக திருப்பி விடுகிற செயல் கண்டிக்கத்தக்கது. நாங்கள் யாரையும் அச்சுறுத்தவில்லை. திராவிட மாடல் அரசராக இருந்தாலும், ஆன்மீக உணர்வுகளுக்கு மதிப்பளித்து வருகிறோம்.

நீதிபதிக்கு பயம் காட்டுகின்ற அச்சுறுத்துகிற இயக்கம் திமுக அல்ல. எத்தனை தீர்ப்புகள் வந்த போதிலும், நாங்கள் அமைதியாக தான் காத்திருக்கின்றோம். நீதிபதியை அச்சுறுத்திய வரலாறு எங்களுக்கு கிடையாது. நீதியை மதிப்பவர்கள் நாங்கள். நீதிபதியை அச்சுறுத்துபவர்கள் போலியானவர்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை எல்லாம் தூண்டி விடுகிறார்கள். திமுக-வுக்கு எதிராக பாஜகவும், அதை சார்ந்தவர்களும் செய்கின்ற சதி வேலை தான் இது. நியாயத்தின் பக்கம் தான் நாங்கள் நிற்போம்” என்று தெரிவித்தார்.

மேலும், “அண்ணாமலை பகல் கனவு காண்பார். குற்றச்சாட்டை வைப்பார். அமலாக்கத்துறை விவகாரத்தில், அண்ணாமலை சொல்வதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. அதை அரசு பார்த்துக் கொள்ளும். தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசு என்ன வேண்டும் என்றாலும் செய்யும். மக்கள் மத்தியில் திராவிட மாடல் அரசுக்கு வரவேற்பு இருக்கிறது.

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் வாயிலாக, 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளார்கள் என்றால் இறந்தவர்கள், இரட்டை வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். உண்மையான வாக்காளர்கள் எங்களுக்கு தான் வாக்களிப்பார்கள். திமுக கூட்டணி 200 என்ற இலக்கை நிச்சயம் பெறும்.

மேகதாது அணை விவகாரத்தில் திமுக அரசு துரோகம் செய்யாது என்று கூறிய ரகுபதி, “நாங்கள் நீதிமன்றம் மூலமாகவோ, நீர்வளத் துறை மூலமாகவோ, தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வோமே தவிர, ஒரு காலத்திலும் தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்திற்கு எதிராக மேகதாதுவில் அணைக்கட்ட விடமாட்டோம் என்று உறதி அளித்துள்ளார்.

மேலும், தாங்கள் கூட்டத்திற்கு வந்தவர்கள் எல்லாம் நெரிசலில் சாக வேண்டும் என்று நினைக்கக் கூடிய சாடிஸ்ட் தாங்கள் கிடையாது என்று பேசிய அமைச்சர் ரகுபதி, கரூரில் இருந்து விஜய் செல்லும் போது கூட காவல் துறைக்கு நன்றி தெரிவித்து விட்டு தான் சென்றார் என்று தெரிவித்தார்.

அரசி​யல் நிர்​பந்​தங்​களுக்கு நீதிப​தி​களை அடிபணிய வைக்க முயற்சி! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை நீக்கக் கோரிய எதிர்க்கட்சிகளுக்கு கடும் கண்டனம்…

[youtube-feed feed=1]