புளோரிடா:

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், தான் ஆசையாக வளர்த்த ஈமு கோழி, வளர்த்த வரையே கொத்தி குதறியது. இதில் பலத்த காயம் அடைந்தவர், சிகிசிச்சை  பலனின்றி உயிரிழந்தார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த  மார்வின் ஹாஜொஸ். 75வயதான அவருக்கு விதவிதமான பறவைகளை வளர்ப்பதில் அலாதி பிரியம். பல வித்தியாசனமான பறவைகளை வளர்த்து வருகிறார். அதனுடன் ஈமு இனத்தை சேர்ந்த கசோவாரி என்ற பறவையையும் வளர்த்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று கசோவாரிக்கு உணவு கொடுக்க சென்றபோது, எதிர்பாராதவிதமான கால் இடறி கீழே விழுந்தார். இதைக்கண்ட கசோவாரி  ஈமு, அவரை அனது அலகால் கொத்தி குதறியது. இதில் பலத்த காயம் அடைந்த மார்வின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கூறிய  அமெரிக்க சரணாலய அதிகாரிகள், ஆபத்தான பறவையான கசோவாரியை அவர் எப்படி செல்லப்பிராணியாக வளர்த்தார் என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.

உலகின் ஆபத்தான பறவையாகக் கருதப்படும் கசோவாரி பறவைகள் ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்டவை. சுமார் 1 மீட்டர் முதல் 2 மீட்டர் வரை  இந்த பறவை வளரக்கூடும். ஆசையாக வளர்த்த பறவையே முதியவரின் உயிரைப் பறித்த  சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.