சென்னை: துறைமுகம் தொகுதியில் தவெக வேட்பாளர் சினோராவை தாக்கியதாக முன்னாள் திமுக அமைச்சர் சேகர்பாபு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில், முன்னாள் அமைச்சரும், வேட்பாளருமான சேகர் பாபு மற்றும் தவெக வேட்பாளர் சினோரா அசோக் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, அமைச்சராக இருந்த சேகர் பாபு, சினோரா அசோக் வயிற்றில் குத்தி, கொலை மிரட்டல் விடுத்து, தன்னை தாக்கியதாக சினோரா அசோக் புகார் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ வைரலானது.
இதைத்தொடர்ந்து, தனக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்தார். ஆனால், அப்போது திமுக ஆட்சி நடை பெற்றதால், இந்த புகாரின்மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படவிலலை.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகார் குறித்து விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]