சென்னை திருவொற்றியூரில் இன்று காலை சாலையில் நடந்து சென்ற பெண்ணை எருமை மாடு ஒன்று குத்தி தரதரவென இழுத்துச் சென்றது.

இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் நடந்து சென்ற அந்த பெண்ணை தனது கொம்பால் குத்திய மாடு அவரை அப்படியே அந்தரத்தில் தூக்கி வீசியது.

இதில் அந்தப் பெண்ணின் ஆடை மாட்டின் கொம்பில் சிக்கிய நிலையில் அவரை அப்படியே தரதரவென சாலையில் இழுத்துச் சென்றது.

அருகில் இருந்தவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில் அந்த எருமை மாட்டை விரட்டிச் சென்று அந்த பெண்ணை மீட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.