லண்டன்:
இங்கிலாந்து நாட்டின் ராணுவ பொறுப்பிலிருந்து இங்கிலாந்து இளவரசர் பிலிப் ஒய்வு பெற்றுள்ள தாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இங்கிலாந்து நாட்டில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர் பிலிப் (வயது 99) கடந்த 2017-ம் ஆண்டு வயோதிகத்தின் காரணமாக பொது வாழ்க்கையில் இருந்து இளவரசர் பிலிப் ஓய்வு பெற்றார்.
இருந்தாலும், இங்கிலாந்து ராணுவத்தின் மிகப்பெரிய காலாட்படையான ரைபிள் படையின் தலைமை கர்னல் என்ற ராணுவ பொறுப்பை வகித்தார். இதற்காக அவரை எடின்பரோ கோமகன் என்று அழைக்கப்பட்டு வந்தார். சுமார் 67 ஆண்டுகள் இந்த பணியில் நீடித்து வந்தார்.
இந்த நிலையில், அவர் பணி ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. விண்ட்சர் கோட்டையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ராணுவ விழாவில் அவர் ராணுவ பொறுப்பில் இருந்தும் முறைப்படி விலகினார்.
அதைத்தொடர்ந்து, அவரது பொறுப்பை, அவரது மருமகளும், இளவரசர் சார்லஸ்சின் மனைவியு மான கமிலாவிடம் ஒப்படைத்தார்.
இதையடுத்து, கமிலா, கார்ன்வால் கோமகள் என்று அழைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விழாவில் இளவரசர் பிலிப் பேசும்போது, தான் 67 ஆண்டு காலம் ராணுவ பொறுப்பு வகித்து சேவையாற்ற வழங்கிய வாய்ப்புக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.