புதுச்சேரி:
புதுச்சேரி சட்டமன்றம் கடந்த 20ந்தேதி தொடங்கி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இ3 நாளைக்கு பிறகு இன்று கவர்னர் கிரண்பேடி உரையாற்றுகிறார்.

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 20ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஆளுநர் கிரண்பேடி உரையாற்ற மறுத்து, தனக்கு மேலும் அவகாசம் வேண்டும் என்று கூறினார். ஆனால், சட்டப்பேரவையை ஒத்தி வைக்க சபாநாயகர் மறுத்து, அன்றைய தினம் திட்டமிட்டபடி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுநர் வருகைக்காக சபை மதியம்  வரை ஒத்தி வைக்கப்பட்டு பின்னர், மீண்டும் சபை மதியம் 12 மணிக்கு கூடியது. அப்போதும் கிரண்பேடி வராத நிலையில்,  முதல்வர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த விவகாரம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,  நாராயணசாமி தலைமையிலான மாநில காங்கிரஸ் அரசின் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் கிரண்பேடி இன்று பேரவையில் உரையாற்றுகிறார்.
பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த பின்பு ஆளுநர் உரையாற்றுவது இதுவே முதல்முறையாகும். ஆளுநர் வகையையொட்டி, சட்டமன்றம் வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.