ஊரடங்கின் போது புகைப்படக் கலைஞர் எல்.ராமச்சந்திரன் நடிகர் விஜய் சேதுபதியை அழைத்தபோது
“நான் மிகச் சோர்வாக இருக்கிறேன். என் வீட்டின் சுவர்களை வெறித்துப் பார்க்கிறேன்” என்றார் விஜய் சேதுபதி.
“அதுதான் வேண்டும்” என்றார் ராமச்சந்திரன்.
அடுத்த சில நாட்கள் கழித்து, ‘மனிதன்’ என்ற கருத்தை அடிப்படையாக வைத்து ராமச்சந்திரனின் ஸ்டூடியோவில் மூன்று மணி நேரங்களுக்கு ஃபோட்டோ ஷூட் ஒன்று நடந்தது.
“தெருக்களில் இருக்கும் மக்களைக் கவனிக்கும் போது அவர்களிடம் என்னவோ வித்தியாசமாக இருந்தது. தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர், வாழ்க்கை மாறிவிட்டதைப் பற்றிப் புலம்பினர். விஜய் சேதுபதி அப்படியான ஒரு உணர்ச்சியைக் காட்ட வேண்டும் என்று விரும்பினேன். அதை அவர் அற்புதமாகச் செய்தார்” என்கிறார் ராமச்சந்திரன்.
விஜய் சேதுபதியை வைத்து ‘மனிதன்’ என்ற போட்டோ ஷூட் எடுக்கப்பட்டதன் பின்னணி குறித்து புகைப்படக் கலைஞர் எல்.ராமச்சந்திரன் இவ்வாறு பகிர்ந்துள்ளார் .