சென்னை:
சென்னையில் கொரோனா தடுப்பிற்கு ரூ.400 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மார்ச் 24ந்தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு உச்சமடைந்திருந்தது. இதனால் தடுப்பு பணிகளும் தீவிரமாக நடைபெற்றது. வீடு வீடாக கொரோனா செக்கப் பணிக்கு ஏராளமான பணியாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு உள்ளனர்.
தற்போதைய நிலையில், சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 83,377 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,376 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் கொரோனா தடுப்பிற்கு ரூ.400 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று கூறியவர், நாட்டின் பொருளாதாரம் மீண்டு வரவேண்டும் என்றாலும், மக்களின் வார்வாதாரம் காக்கப்பட வேண்டும் என்றாலும் இயல்பு நிலை திரும்ப வேண்டும். அதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியவர், சென்ரனையில், மேலும் தளர்வுகளுக்கு தயாராகும் வகையில் பணிகளை முடுக்கிவிட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.