சென்னை:
மிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் தேவையின்றி சுற்றியதாக இதுவரை, 7,91,051 வழக்குகளும், ரூ.18,30,58,491 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்து உள்ளது.

தமிழக காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,   தமிழகத்தில் ஊரடங்கை மீறிய தாக இதுவரை 8,68,889 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கை மீறியதாக 6,40,145 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இதுவரை (17ந்தேதி மாலை நிலவரம்) 7,91,051 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ரூ.18,30,58,491 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 3,809 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.   4,721 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும்,  கடந்த 24 மணி நேரத்தில் 1,286 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.