ரஜினி படத் தயாரிப்பாளருக்கு கொரோனா?
ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்தவர், ராக்லைன் வெங்கடேஷ்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர் தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார்.
மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் ராக்லைன் வெங்கடேஷ், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது மகனான டாக்டர் அபிலாஷா, தந்தையை உடன் இருந்து கவனித்து வருகிறார்.
அண்மையில் ராக்லைன் வெங்கடேஷும் நடிகையும், எம்.பி.யுமான சுமலதாவும் கர்நாடக முதல் அமைச்சர் பி.எஸ்.எடியூரப்பாவைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.
சுமலதாவின் கணவரும், நடிகருமான அம்பரீஷுக்கு, பெங்களூருவில் நினைவு இல்லம் அமைப்பது குறித்து அவர்கள், எடியூரப்பாவுடன் ஆலோசனை நடத்தினர்.
இரு தினங்களுக்கு முன்னர் சுமலதாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால், அவர் வீட்டில் தன்னை, தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராக்லைன் வெங்கடேஷுக்கும் , கொரோனா தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
-பா.பாரதி.