சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,261 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 72,500 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 49587 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 21,766 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவகின்றனர்.
சென்னையில் நேற்று 26 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1146-ஆக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில், நேற்று மாலை முதல் இன்று காலை 10 மணி வரை இடைப்பட்ட 16 மணி நேரத்தில் மேலும் 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 6 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 3 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனையில் 2 பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.