விழுப்புரம்

கொரோனா தொற்றைத் தடுக்க சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வருவோர் விழுப்புரம் நகருக்குள் நுழைய இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  மொத்தம் 1.22 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இதையொட்டி பல இடங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.   கொரோனா பரவலுக்கு சமூக இடைவெளியை பின்பற்றாதது காரணம் எனக் கூறப்படுகிறது.    இந்த நிலை அதிகமுள்ள நகரங்களில் இதைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இதையொட்டி விழுப்புரம் நகரில் இன்று முதல் நகரைச் சுற்றி உள்ள சிற்றூர்களில் வசிப்போர்  நகருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  விழுப்புரம் நகரில் மக்கள் நடமாட்டத்தைக் குறைத்து கொரோனா பரவலைத் தடுக்கா இந்த நிஅடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   இந்த தடையில் ஒரு சில தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி விழுப்புரம் நகரில் உள்ள அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், மருத்துவச் சிகிச்சை தொடர்பாக நகருக்குள் வருவோர் உள்ளிட்டோர் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். காய்கறிகள், மளிகைப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களும் நகருக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றன.