கோவை சிங்காநல்லூர் எஸ்ஐஎச்எஸ் காலனி சாலையில் மயில்கள் சுற்றித் திரிவது வழக்கம். அப்போது நேற்று அங்கு பெட்ரோல் பங்க் முன்பாக உள்ள டிரான்ஸ்பார்மரில் மோதி மின்சாரம் பாய்ந்து மூன்று வயதுள்ள பெண் மயில் ஒன்று உயிரிழந்து விட்டது.
மயில் நமது தேசிய பறவை என்பதால் அப்பகுதி மக்கள் உடனடியாக சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த சிங்காநல்லூர் காவல்துறையினர் டிரான்ஸ்பார்மரில் தொங்கிபடி இருந்த உயிரிழந்த பெண் மயிலின் உடலை மீட்டனர். மேலும் அந்த அதன் உடலின் மீது தேசியக்கொடியை போர்த்தி உரிய மரியாதை செய்தனர் காவல் துறையினர். பின்பு மயிலின் உடலை மதுக்கரை வனத்துறையினரிடம் முறைப்படி ஒப்படைத்தனர் காவல்துறையினர்.
இறந்த மயிலுக்கு இவ்வாறு தேசிய கொடி போர்த்தி மரியாதை செய்ததை அந்த பகுதி பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
– லெட்சுமி பிரியா

[youtube-feed feed=1]