Patrikai.com official YouTube Channel
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டெல்லி:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு, உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைக்கு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

சாத்தான்குளம் வணிகர்களான ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. டிவிட்டர் சமூக வலைதளத்தில் டிரென்டிங்காகி உள்ளது.
இந்த நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டிவிட் பதிவில்,
பொலிஸ் காவலில் உள்ள குடிமக்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களை நாங்கள் கண்டிக்கிறோம்; தூத்துக்குடி வழக்கை மாவட்டம் நிர்வாகம் விரைவாகவும் நியாயமாகவும் விசாரிக்க விசாரணை நிறுவனங்களுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.