மதுரை:
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும், விதிமீறி கடைகளை திறந்த 43 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளது. இதன் காரணமாக நள்ளிரவு முதல் 30ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மதுரை மாநகராட்சிப் பகுதிகள் மற்றும் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் பறவை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இன்று மேலும் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மொத்த பாதிப்புகள் 1,084 ஆக உயர்ந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 405 பேர் இதுவரை குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். மேலும் நேற்று வரை சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 574 ஆக இருந்த நிலையில், இன்று 670 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், முறையாக ஊரடங்கு உத்தரவை பின்பற்றப்படாமல், தனிமனித இடைவெளி மற்றும் முகக் கவசங்கள் அணியாமல் செயலபட்ட பழக் கடைகள், டீ கடை மற்றும் பேக்கரி உள்ளிட்ட 43 கடை களை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மாநகர காவல் துறையினரும் சீல் வைத்துள்ளனர்.