புதுச்சேரி:
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும், மாநிலத்தில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து நாளை அறிவிக்கப்படும் என்றும், அரசு விதிக்கும் கடும் கட்டுப்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தொற்று பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும், இது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தவுடன் இந்த மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று கூறியவர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, புதுச்சேரி சட்டசபை வளாகத்திற்குள் பொதுமக்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சரியான காரணங்கள் இல்லாமல் யாரும், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் அலுவலகத்திற்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.