செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 87 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது மாவட்ட மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலில் சென்னை முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (18ந்தேதி) 115 பேருக்கு பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3285 ஆக உயர்ந்திருந்தது. இந்த நிலையில், இன்று  மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,372ஆக உயர்ந்துள்ளது.