சென்னை:
கொரோனா தொற்று பரவலில் இருந்து தப்பிக்க ஐசிஎம்ஆர் துணை இயக்குனரும், தமிழக அரசு அமைத்துள்ள மருத்துவக்குழுவின் தலைவருமான பிரதீப் கவுர் 6 ஆலோசனைகளை வழங்கி உள்ளார். இதை தவறாமல் கடைபிடித்தாலேயே கொரோனா உங்களை அண்டாது என்று அறிவுறுத்தி உள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்திலும் கொரோனா தொற்று உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் தீவிரமடையும் தொற்றால் மக்கள் பீதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனாவில் தொற்று பரவலில் இருந்து தப்பிக்க எந்த மாதிரியான மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து 6 விஷயங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
- 1.தினசரி புரதச்சத்து மிக்க பழங்கள், காய்கறிகளை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 2.யோகா, நடைபயிற்சி, வீட்டு வேலைகள் உள்ளிட்ட உடற் பயிற்சிகளை வாரத்திற்கு 150 நிமிடங்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
- 3.நீரிழிவு, ரத்தக்கொதிப்பு உள்ள நோயாளிகள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளக் கூடாது.
- 4.அன்றாட உணவின் மூலம் போதிய வைட்டமின் கிடைக்கவில்லை என்றால் வைட்டமின் சி மற்றும் டி ஆகிய மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.
- 5.உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள போதிய அளவு தூக்கம் அவசியம்.
- 6.புகைப்பிடித்தலை கைவிட வேண்டும். புகைப்பழக்கத்தைக் கைவிட இதுவே சிறந்த தருணம் என்றும் தெரிவித்துள்ளார்.
கொரோனாவில் இருந்து தப்பிக்க தனியாக மருத்து இருக்கிறதா என்று கேட்கும் மக்கள் மேற்கூறிய 6 பழக்க வழக்கங்களை பின்பற்றினாலே கொரோனாவில் இருந்து எளிதாக விடுபடலாம் என்று அறிவுரை கூறி உள்ளார்.