சென்னை:
தமிழகத்தில் ஊரங்கை மீறி வெளியே சுற்றியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.12.40 கோடி ஆக அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் ஜூன் 30ந்தேதி வரை ஊடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், ஊரங்கு விதிகளை மீறி தேவையின்றி ஊர் சுற்றுபவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில். இன்று காலை (14-09/2020) 9 மணி நிலவரப்படி, தற்போது வரை ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியதாக 6,33,005 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். மேலும், 4,69,228 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், ரூ. 12.40 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் தமிழ்நாடு காவல்துறை அறிவித்து உள்ளது.