திருவள்ளூர்:
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்திலும் பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் மேலும் 80 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. அதிகப்பட்சமாக சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று வரை 1,752 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று புதியதாக மேலும் 80 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,832 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 830 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று ஆவடியில் 15 பேருக்கும், வில்லிவாக்கத்தில் 11 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.