நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்தநிலையில் கொரோனா ஊரடங்கால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது .
இந்த நிலையில் படத்தின் பாடல்களை பிரபலங்கள் முதல் பெரும்பாலானோர் டிக் டாக் செய்து பதிவேற்றி வருகின்றனர் .
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் மற்றும் குட்டி ஸ்டோரி பாடல் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களின் பேவரைட் சாங்காக இருந்து வருகிறது.
Rockstar @anirudhofficial shares the reaction Video at the studio when they heard the beat of #VaathiRaid for the first time 🥁#Master @actorvijay @Dir_Lokesh @Jagadishbliss @MrRathna @MasterMovieOff
— #GOAT Movie (@GOATMovOff) June 9, 2020
இந்தநிலையில் தற்போது வாத்தி கம்மிங் பாடல் மேக்கிங்க் வீடியோவினை அனிருத் சமூக வலைதளத்தில் வெளியிட, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.