நடிகர் சிவகுமார் பழையதை மறக்காதவர். தனக்கு இளவயதில் படிக்க வசதி இல்லை என்பதால் நடிகர் ஆன பிறகு ஏழை மாணவ மாணவிகளுக்கு படிக்க உதவினார். அந்த உதவியை இன்றைக்குஅவரது மகன்கள் சூர்யா, கார்த்தி செய்து வருகின்றனர்.
1958ம் ஆண்டு முதல் 1965ம் ஆண்டுவரை 15 ரூபாய் வாடகை கொடுத்து தங்கிய வீட்டின் படத்தை வெளியிட்டு பழைய நினைவுகளை பகிர்ந்திருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது:
1958 -1965 மாதம் 15/- ரூபாய் வாடகை கொடுத்து வாழ்ந்த புதுப்பேட்டை வீடு…7 ஆண்டுகள் இந்த வீட்டில் வாழ்ந்தபோது வரைந்தவை, எனது அத்தனை ஓவியங் களும்…ஓவியக்கல்லூரி 6 ஆண்டுகள், அதற்கு முன் மோகன் ஆர்ட்ஸில் 1 வருடம்….
இந்தியாவில் டெல்லி முதல் கன்யாகுமரி வரை சுற்றி ஓவியம் தீட்ட அக்காலத்தில் ஆன மொத்த செலவு ரூ.7500/- ..குறைந்த தேவை களுடன் உயர்ந்த லட்சியத்துடன் வாழ்ந்த நாட்கள் பொன்னான நாட்கள் 😊🌺
இவ்வாறு சிவகுமார் கூறியிருக்கிறார்.