
ஜெனிவா: கொரோனா தொற்று அறிகுறியற்ற நபர்களிடமிருந்து பிறருக்கு பரவுகின்ற நிலையானது, இன்னும் தீர்வுகாணப்படாத ஒரு பிரச்சினையாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனமான WHO.
எனவே, பொதுவெளியில், ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் அதிகம் தொற்றக்கூடிய வாய்ப்புகள் உள்ளதால், பொதுவெளியில், ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிவதை, உலக அரசுகள் கட்டாயமாக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளது அந்த அமைப்பு.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, முகக்கவசம் அணிவது ஒன்றே நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே தீர்வு என்று உலக சுகாதார அமைப்பின் சார்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஊரடங்கை தளர்த்தும் விஷயத்திலும் 6 விதிமுறைகளைக் கூறியுள்ளது அந்நிறுவனம். நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்கு இருத்தல், கண்டறியும் வகையில் இருத்தல், பரிசோதனை, தனிமைப்படுத்துதல் மற்றும் ஒவ்வொருவருக்கும் சிகிச்சையளித்தல் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் தொடர்புகளைக் கண்டறிதல், முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருத்தல், சமூகங்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டிருத்தல், புதிய சூழலில் வாழ்வதற்கு பழக்கப்பட்டிருத்தல் உள்ளிட்டவைதான் அந்த விதிமுறைகள்.
[youtube-feed feed=1]